திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
குடியாத்தத்தில் திருமலை திருப்பதி திருக்குடை குழுவினர் மற்றும் விஷ்வ
இந்து பரிஷத் சார்பில் திருப்பதி திருக்குடைகள் 3ஆம் ஆண்டு ஊர்வலம் தொடங்கியது. சந்தப்பேட்டையில் உள்ள சீதாராம ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடைகள் மற்றும் வெங்கடேச பெருமாள் பாதம் ஊர்வலமாக புறப்பட்டது.
நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய பெருமாள் பாதங்கள் ஊர்வலம் பிச்சனூர்பேட்டை தென்திருப்பதி பெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.