திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை நடந்த காவல் மரணங்களில் 40 சதவீதம் பேர் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மனித உரிமைகள் அமைப்பான பீப்பிள்ஸ் வாட்ச்சின் தரவுகளின் படி, மே 2021 முதல் ஆகஸ்ட் 2025 வரை திமுக ஆட்சியில் 32 பேர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 40 சதவீதம் பேர் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 9 பேர் பட்டியல் வகுப்பையும், இரண்டு பேர் பழங்குடியின வகுப்பையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் அதிகபட்சமாக மூன்று காவல் மரணங்களும், திருநெல்வேலி, விருதுநகர், நாமக்கல் மற்றும் தூத்துக்குடியில் தலா இரண்டு காவல் மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.