சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இன்று இரவு 9.50 மணி முதல் நாளை அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்க உள்ளது. இதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று பிற்பகல் 3:30 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி கோயில் நடை மூடப்பட்டது.
சந்திர கிரகணம் முடிந்த பின்னர் கிரகண தோஷ நிவாரண பூஜை, நித்ய பூஜை ஆகியவை செய்யப்பட்ட பின் அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. சந்திர கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் போன்ற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.