ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைக்கப்பட்டிருந்த 72 உயர பிரமாண்ட களிமண்ணாலான விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்நிலையில் விஜயவாடாவின் சிதார் மைதானத்தில் பூஜைக்காக வைக்கப்பட்ட 72 அடி உயர பிரமாண்ட களிமண்ணாலான மகாவிநாயகர் சிலை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு கரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர், விநாயகர் சிலைக்கு இறுதி ஆரத்தி காண்பித்து பிரியாவிடை அளித்தனர்.