மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், ராமர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற தமது தொண்டர்கள் ஆதர்வு தெரிவித்து செல்வதாக கூறினார். இரு நாட்களில் சுமார் 10,000 பேர் சந்தித்ததாகவும் கூறினார்.
மன நிம்மதிக்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் செல்வதாகவும், பின்னர் ராமர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
செப்.9-ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன் என கூறவில்லை என்று தான் கூறவில்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.