ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நதியின் நடுவே சிக்கிக் கொண்ட இளைஞரை ராணுவ அதிகாரிகள் டிரோன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
உதய்பூரி உள்ள அஹார் நதிக்குச் சென்ற இளைஞர் ஒருவர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டார்.
நீரோட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதால் இளைஞர் வெளியேற முடியாத நிலையில், தகலவறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு பணிக்காக ராணுவத்தினர் வந்தனர். அப்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இளைஞரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
இறுதியில் மீட்பு பணிக்கு டிரோனை பயன்படுத்த முடிவு செய்த ராணுவத்தினர், அதன் மூலம், முதலில் இளைஞரிடம் லைஃப் ஜாக்கெட்டை கொண்டு போய் சேர்த்தனர்.
பின்னர் டிரோனின் மூலம் இளைஞரிடம் தடிமனான கயிறைக் கொண்டு போய் சேர்த்த ராணுவத்தினர், அதன் மூலம் இளைஞரை கரைக்கு இழுத்து பத்திரமாக மீட்டனர்.
சுமார் 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சியை, இந்திய ராணுவம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.