இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட 4 நாள் டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்திய ஏ அணியை பிசிசிஐ அறித்துள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், துருவ் ஜூரெல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அபிமன்யு ஈஸ்வரன், என். ஜெகதீசன், சாய் சுதர்சன், தேவ்த படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.