தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்துக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இண்டூர் அடுத்த தளவாய் ஹள்ளி ஊராட்சியில் உள்ள 65 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை அதிகாரிகளின் துணையோடு தனிநபர் முறைகேடாகப் பட்டா செய்துள்ளார்.
அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதைக் கண்டித்துக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.