அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க்கின் ஆர்தர் ஆஷ்லே திடலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் சபலென்காவும், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 5-5, 7-6 என்ற செட்கணக்கில் வென்று அமெரிக்க ஓபன் பட்டத்தைச் சபலென்கா தக்கவைத்துக் கொண்டார்
. 2014ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்த முதல் பெண் என்ற பெருமையையும் சபலென்கா பெற்றுள்ளார்.