திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமியை ஒட்டி 2ம் நாளாகப் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி, ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி திரளான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
ஆவணி மாத பௌர்ணமி 2 இரவுகள் வந்த நிலையில், நேற்றிரவும் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.