தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தெலங்கானாவில், கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. வாரங்கல், காமரெட்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் வாரங்கல் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அங்குள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் பேருந்து, வெள்ள நீரில் சிக்கியது.
இதனால் பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் தவித்தனர். இதனையடுத்துத் தகவலறிந்து வந்த அம்மாநில காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை கயிறு கட்டி ஒருவர் பின் ஒருவராகப் பத்திரமாக மீட்டனர்.