தூத்துக்குடி அருகே போலீசாரை மிரட்டும் தொனியில் பேசி வீடியோ வெளியிட்ட இளைஞர், தற்போது மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கோவில்பட்டியைச சேர்ந்த முகில்ராஜ் என்ற 20வயது இளைஞர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இவர், தன்னுடையை நண்பரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கும் போலீசாரை எங்கிருந்தாலும் வெட்டுவேன் எனக் கூறி வீடியே வெளியிட்டார்.
இதையடுத்து முகில்ராஜை உடனடியாகப் பிடித்த போலீசார், விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு முகில்ராஜ் வீடியோ வெளியிட்டார். இதையடுத்துப் போலீசாரின் கடும் எச்சரிக்கைக்குப் பின் அந்த நபர் அனுப்பி வைக்கப்பட்டார்.