பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.
மேலும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.