இங்கிலாந்தில் விநாயகர் சிலை விஜர்சனம் நிகழ்வில் விநாயகரை அன்னப்பறவைகள் கூட்டம் வரவேற்பது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விநாயகர்ச் சதுர்த்தி திருவிழா இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அங்குள்ள நீர் நிலைகளில் கரைக்கக் கொண்டு சென்றனர்.
அப்போது நதியொன்றில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வு நடைபெற்ற போது விநாயகரை வரவேற்கும் வகையில் அன்னப்பறவைகள் அந்த ஆற்றின் மேற்பரப்பில் நீந்தியபடி படகை நோக்கி வந்தன.
வெண் நிறத்தில் அழகாக அவை நீந்தி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.