நடப்பாண்டின் கடைசி சந்திரக் கிரகணத்தை உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.
நேற்று இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திரக் கிரகணம், 11 மணியளவில் முழு சந்திரக் கிரகணமாக மாறியது.
பொதுமக்கள் வெறும் கண்களாலேயே இதனைப் பார்க்க முடியும் என்பதால், தங்களது வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்ந்தனர்.
வானத்தைக் கண்காணிப்பவர்களும் இதற்கெனப் பிரத்யேக இயந்திரங்களைக் கொண்டு சந்திரக் கிரகணத்தின் போது நிலவை ஆய்வு செய்தனர்.
இந்த சந்திரக் கிரகணம் யாமத்தில் ஒன்றரை மணி வரை நீண்டது. சந்திரக் கிரகணம் காரணமாகக் கோயில்கள் மூடப்பட்டு, புனித யாத்திரைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை வழக்கம் போல் திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மீண்டும் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.