அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுவெளியில் சிறுநீர் கழித்த நபரைத் தட்டிக்கேட்ட இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில். இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கடையில் பாதுகாப்பு காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கபில் பணியில் இருந்தபோது ஒருவர் பொதுவெளியில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.
இதனைக் கபில் தட்டிக் கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த நபர், துப்பாக்கியால் கபிலைச் சுட்டுக் கொலைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர். கபிலின் மரணத்தால் நொறுங்கிப் போயுள்ள குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.