தமிழ்நாடு டிஜிபி நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு UPSC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி வெங்கட்ராமனை நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் வினா எழுப்பினர்.
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, காவல் உயரதிகாரி ஒருவர் டிஜிபி நியமனப் பெயர் பட்டியலில் தன்னையும் சேர்க்குமாறு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டதாகவும்
அதனால் தற்போதைக்கு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள பெயர்ப் பட்டியலை UPSC விரைவாகப் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனிடையே டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பாக UPSCக்கு கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற மனுதாரிரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.