படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை காளைமாடு முட்டித் தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் சங்கிலி என்பவர் மஞ்சுவிரட்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மாயப்புத்தகம், தெக்கத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அசோக் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் காளையுடன் நடிகர் அசோக் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காளை, அவரை முட்டி கீழே தள்ளியது..
இதில், வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், நடிகர் அசோக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.