கோவைக் கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தால் சுமார் ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், விவசாயத்தை அழிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்குச் சாதகமாக அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர்.