ராணிப்பேட்டை மாவட்டம் அவரக்கரை அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரக்கரை அடுத்த அரசு தோட்டக்கலை தென்னம் பண்ணை அருகே தனது ஆண் நண்பருடன் இளம்பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 நபர்கள் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த நிலையில், 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.