குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய் கிழமை நடைபெறவுள்ளது.
மாநிலங்களை, மக்களவைச் சேர்த்து மொத்தம் 781 வாக்குகள் உள்ள நிலையில் வெற்றிப் பெறுவதற்கு 391 வாக்குகள் தேவை என்ற நிலை உள்ளது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 425 எம்.பி.க்களுடன், பெரும்பான்மையைவிட முன்னிலையில் உள்ளது.
கடந்த 2022 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் மொத்த வாக்குகளில் 75 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.
ஆனால் தற்போது நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
YSR காங்கிரஸ், BJD மற்றும் BRS கட்சிகள், சுயேச்சைகள், சிறிய கட்சிகளின் நிலைப்பாடு வெற்றி வித்தியாசத்தைக் குறைக்குமெனக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெறுவது உறுதி என்றாலும், முந்தைய தேர்தலை விட வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது.