அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் - திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!
Sep 20, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாநகராட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதியில் கட்டி கொடுத்த 4 ரேஷன் கடைகளை மூடிவிட்டு, திமுகவினர் வாடகை இடத்தில் கடைகளை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சியின் 55வது வார்டில் 4 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. முன்னர், அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த வெங்கடாசலம், எம்.கே.செல்வராஜ், தற்போதைய எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர்  தங்களின் தொகுதி நிதியிலிருந்து புதியதாக ரேஷன் கடைகளை  கட்டி கொடுத்தனர்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வேறு பகுதியில் உள்ள வாடகை  கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. குறிப்பாக 73வது எண் கொண்ட ரேஷன் கடைக்குச் சுமார் 12 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதே போல், மற்ற கட்டடங்களும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டன.

ஆனால், அவை அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளதால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. இதுபோதாதென்று, 4 ரேஷன் கடைகளும் செயல்படும் கட்டடங்களுக்கு வாடகை வேறு தர வேண்டியுள்ளது.

ஒவ்வொரு கடைக்கும் 5,000 முதல் 7,000 ரூபாய் வரை வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பணமும் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிட தேவையில்லை.

சேலம் மாநகராட்சியின் 55வது வார்டில் இயங்கவேண்டிய கடைகள், அருகில் உள்ள வார்டுகளில் உள்ள கட்டங்களில் செயல்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்க குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர்  தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் கட்டிக் கொடுத்த கட்டடங்கள் தற்போது திமுகவினரின் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் பகுதியாக மாறியுள்ளதாகக் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, 55வது வார்டில் உள்ள பல அரசு கட்டிடங்களில் நீண்ட நாட்களாகக் கார்கள் நிறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழைய கட்டடங்களுக்கே ரேஷன் கடைகளை மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல்DMKADMKரேஷன் கடைRation shops built with funds from AIADMK MLAs are closed - Shocking as they have turned into car parking for DMK members
Share
Tweet
SendShare
Previous Post

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

Next Post

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies