ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் வழக்கைச் சிபிஐ-க்கு மாற்றக்கோரி பெண்ணின் தந்தை அண்ணாதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்
அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக விசாரணை அதிகாரி செயல்படுவதாகவும், முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
வழக்கானது நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணை எந்த நிலையில் உள்ளதென நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கைச் சிபிஐக்கு மாற்ற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மாவட்ட எஸ்.பி. மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்