மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி வழக்கில், பெண் அலுவலர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி தொடர்பாக ஏற்கெனவே 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 19 பேர் பணியிடை மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்கள் , 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். வரி மோசடி தொடர்பாக மதுரை காவல் சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக பெண் அலுவலர் உட்பட 3 பேரை, மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சொத்து வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.