டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது பூஜைகள் செய்வதற்காக தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் தினமும் 2 தங்க கலசங்களை கொண்டு வருவார்.
அந்த கலசங்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், மேடையில் வைத்திருந்த 2 தங்க கலசங்கள் திருடு போயின. இதுதொடர்பாக மூவரை கைது செய்த போலீசார் கலசங்களை மீட்டனர்.