ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் மர்தானி கேல் தற்காப்பு கலையை அந்நாட்டுப் பெண்கள் நிகழ்த்தி அசத்தினர்.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்த வகையில் ஜெர்மனியில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் வீதிகளில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மகாராஷ்டிராவின் பாரம்பரிய கலையான மர்தானி கேல் கலையை ஜெர்மனி பெண்கள் நிகழ்த்தி காட்டி அசத்தினர். வாளை சுழற்றி அவர்கள் தங்கள் கம்பீரத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் பாரம்பரிய கலையை வெளிநாட்டினர் ஆர்வத்துடன் கற்று வருவதற்கு இந்த விழா ஒரு சான்றாக அமைந்துள்ளது.