ஆசிய கோப்பை ஹாக்கித் தொடரில் தென் கொரியா அணியை விழ்த்தி இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
பீகார் மாநிலம், ராஜ்கிரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 4வது முறையாகும். மேலும் இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைப் போட்டிக்கு நேரடியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது.