ரஷிய அதிபர் புதின் பல மில்லியன் டாலரை பலகையால் ஆன ட்ரோன்கள் மற்றும் மரப் பொருட்கள் வாங்குவதில் செலவிடுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போரின்போது பல ஆயுதங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் அவற்றில் பெரும்பாலானவை மரத்தால் ஆன பொருட்கள் என்பது தான். 2023-ம் ஆண்டில் ரஷியா மீது ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
அதனை சுட்டு வீழ்த்திய ரஷியா, தங்களின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால், ரஷியா சுட்டு வீழ்த்தியது மரத்தாலான ஒரு சிறிய பொருளைத் தான் என உக்ரைன் அறிவித்தது.
இதேபோல ரஷியா – உக்ரைன் போரின்போது இருநாடுகளும் எதிரி நாட்டை ஏமாற்ற போலியான ஆயுதங்களை பயன்படுத்துவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போரில் ரஷிய வீரர்களை குழப்பும் விதமாக மர பீரங்கிகள், அட்டை பெட்டிகளால் செய்யப்பட்ட வீரர்களை உக்ரைன் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
உக்ரைனின் போலி ஆயுதங்களை எதிர்கொள்ள ஆரம்ப காலத்தில் ரஷியா பெருந்தொகையை செலவிட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது ரஷியாவும் போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.