திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே பட்டா கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாகத் தெரிவித்துள்ளனர்.
திருவெள்ளரை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 45 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இன்றளவும் பட்டா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மனு அளித்தும் பலனில்லை எனத் தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகள் தங்களை அலைக்கழிக்கப்பதாகக் குற்றம் சாட்டினர்.
மேலும், அரசு விழாவின் போது முதலமைச்சர் ஸ்டாலினே தனது கையால் பட்டா வழங்குவார் என அதிகாரிகள் கூறிய நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே ஸ்டாலின் பட்டா வழங்கிவிட்டுச் சென்றதாக திருவெள்ளரை கிராமத்தினர் வேதனைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள் தங்களுக்குப் பட்டா வழங்கவில்லை என்றால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.