துலீப் கோப்பி கிரிக்கெட் தொடரின் தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர்ப் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதி சுற்று முடிவில் மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இறுதிப்போட்டி வருகிற 11ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றிருந்த ஜெகதீசன் மற்றும் படிக்கல் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக இருவரும் துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவர்களுக்கு மாற்றாகத் தமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த் மற்றும் கர்நாடகாவின் ஸ்மரண் ரவிச்சந்திரன் ஆகியோர் தெற்கு மண்டல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.