கூடலூர் அருகே காட்டு யானைத் தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் ஓவேலி பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள் சம்சுதீன், செல்லதுரை ஆகியோரைக் காட்டு யானைத் தாக்கியுள்ளது.
இதில், சம்சுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த செல்லதுரை கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கூடலூர் மருத்துவமனையில் சும்சுதீன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பதற்றம் நிலவியது.