மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ சிட்டியில் ஈரடுக்குப் பேருந்து சென்று கொண்டிருந்தது. முக்கிய சாலையில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது ரயில் வருவதை கவனிக்காத ஓட்டுநர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக ரயில் மோதியதில் பேருந்து நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டது. இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.