அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் அதிக இந்தியர்கள் இருப்பதை பார்த்த நபர், H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டல்லாஸ் பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஓணம் பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாகக் காரில் வந்த டேனியல் கீன் என்பவர், இந்திய வம்சாவளியினரின் கொண்டாட்டத்தை வீடியோவாக எடுத்துச் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்தப் பதிவில், H1B விசாவை ரத்து செய்ய வேண்டும், எனது குழந்தைகள் அமெரிக்காவில் வளரவேண்டும் என விரும்புகிறேன்; இந்தியாவில் அல்ல எனவும் கூறியுள்ளார்.
டல்லாஸ் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் மும்பையின் தெருக்களில் நடப்பது போன்று நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் டேனியலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.