நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் தனது பிரதமர் பதவியை ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டாலும்
இளைஞர்கள் தொடர்ந்து போராடினார்கள்.
இந்நிலையில் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் நேபாளத்தில் பதற்றம் நிலவியது.
மேலும் அதிபர், பிரதமர், அமைச்சர்களின் வீடுகளை சூறையாடி இளைஞர்கள் தீ வைத்தனர். இந்நிலையில் பிரதமர் பதவியை ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
பிரதமர் பதவி விலகியதை தொடர்ந்து நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.