ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி விமானம் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முதல் நபராக வாக்களித்த பிரதமர் மோடி, தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.
பின்னர் அம்மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார். அவரிடம் வெள்ளத்தினால் எங்கு எங்கு சேதம் ஏற்பட்டு உள்ளது மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து கங்கரா என்ற இடத்தில் உயர் அதிகாரிகளுடன் மாநிலத்தில் ஏற்பட்ட இழப்பு மற்றும் தேவையான உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.