ராகுல்காந்தி அவரது தாய் சோனியா காந்தியை அவமதித்ததாகக் கோவா அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான விஸ்வஜித் ராணே குற்றம் சாட்டியுள்ளார்.
கோவா அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான விஸ்வஜித் ரானே பாட்காஸ்ட் நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ராகுல்காந்தி, அவரது தாய் சோனியா காந்தியை அவமதித்தாகத் தெரிவித்தார்.
அப்போது கோவா முதலமைச்சராக இருந்த தனது தந்தைப் பிரதாப்சிங் ராணேவும் உடனிருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து அவரே தன்னிடம் கூறியதாகவும் விஸ்வஜித் ராணே தெரிவித்தார்.
பெற்ற தாயை மதிக்காதவர்கள், ஒருபோதும் இந்திய தாயை மதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். தாயை மதிக்காத ஒருவர், எப்படி இந்திய தாயை மதிப்பார் என்று எதிர்பார்க்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பொது இடங்களில் ராகுல் காந்தி தனது தாயாரை மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறினார். அதற்குப் பதிலளித்த விஸ்வஜித் ராணே பொது இடங்களில் மரியாதைத் தருவதும், வீட்டில் மரியாதை தருவதும் வேறு எனத் தெரிவித்தார்.