வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்திற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து அம்மாநிலத்துக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.