ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெஹ்ராஜ் மாலிக் ஜம்மு காஷ்மீரின் ஆம் ஆத்மி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.
அவர் தோடா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்ததாகக் கூறி பாதுகாப்பு சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய கோரி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், தோடா நகரை நோக்கி ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.