சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்குத் தடை கோரிய மனு தொடர்பாக விளக்கமளிக்கக் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
பம்பையில் வரும் 20ம் தேதியன்று சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்த திருவிதாங்கூர்த் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டுக்குத் தடை விதிக்கக்கோரி ஹைந்தவீயம் அமைப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அந்த மனுவில், மாநாட்டைத் தேவசம்போர்டு நடத்துவதாகக் கூறி கேரள அரசே நடத்துவதாகவும், ஒரு மதசார்பற்ற அரசு மாநாடு நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றம் மனு தொடர்பாக விளக்கமளிக்கக் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர்த் தேவசம் போர்டுக்கும் உத்தரவிட்டது.