டிரம்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமெனச் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுககளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியாவும் இணைந்துள்ளன.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்கக் கொள்கைக்கு எதிரானது என அதிபர் டிரம்ப் விமர்சித்தார். பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகள், கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனச் சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தகப் பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரும் தெரிவித்துள்ளார்.
நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.