நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவை கூட்டி நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு ஏற்பட்டுள்ள வன்முறைக் கவலையளிப்பதாகவும், இளைஞர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை எனத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நேபாள மக்கள் அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, அசாதாரண சூழல் காரணாக நேபாள நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள தூதரகம் சார்பில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.