நேபாளத்தின் அடுத்த பிரதமராகக் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா பதவி ஏற்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேபாளத்தில் சமூக வலைதளத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடல் மற்றும் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோர்ப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேபாளத்தின் அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க வேண்டும் என இளைஞர்களால் வலியுறுத்தப்படும் பாலேன் ஷா, ஒரு சிவில் இன்ஜினியராகத் தனது வாழ்க்கையை தொடங்கினார்.
பின்னர் ராப் பாடகராக இருந்த பாலேன் ஷா, காத்மாண்டுவின் மேயர் தேர்தலில் வெற்றிப் பெற்று அரசியலில் நுழைந்தார். டைம் பத்திரிகையின் 2023 ஆம் ஆண்டின் சிறந்த 100 ஆளுமைகள் பட்டியலில் இடம் பிடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பாலேன் ஷா பிரபலமானவர் ஆனார்.
பாலேன் ஷா ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி நாட்டை வழிநடத்துமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் பாலேன் ஷா நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்க கூடும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.