கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காசா போர்நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் தலைநகர் தோஹா வந்துள்ள ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் கத்தாரும் இணைந்துள்ளது. ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவினரை குறிவைத்து, குறிப்பாகக் கலீல்- அல்-ஹையாவை கொல்ல தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும் ஹமாஸ் அமைப்பினர் யாரும் காயமடைந்ததாகத் தகவல் வெளியாக வில்லை.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.