சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கடந்த 14 மணி நேரமாக நடைபெற்று வந்த அமலாக்கதுறைச் சோதனை நிறைவடைந்தது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செலக்கரசல் பகுதியில் திமுக பிரமுகரான ராமச்சந்திரன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர், தனது மகள் பெயரில் தனியார் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், பல வருடங்களாகத் திருப்பிச் செலுத்தாமல் இருந்த நிலையில், திடீரென மொத்த கடனையும் ஒரே தவணையில் திருப்பிச் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் செட்டிபாளையம் சாலையில் உள்ள ராமச்சந்திரனின் வீடு, அவரது நூற்பாலை அலுவலகம் மற்றும் அவரது உறவினரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 14 மணி நேரமாகச் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.