புதுச்சேரியில் சுகாதாரமற்ற குடிநீர் அருந்தி பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வழங்கப்படும் எனப் பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீரை பருகிய மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதுதொடர்பாக எழுந்த புகாரையடுத்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிப்பட்ட குடிநீர் கேன் வழங்கப்படும் எனப் பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரைச் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நாளை முதல் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு குடிநீர் கேன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.