பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வியடைந்தனர்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் பிடே கிராண்ட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 5வது சுற்றில் உலகச் சாம்பியனான குகேஷ் அமெரிக்காவின் அபிமன்யு மிஸ்ராவிடம் தோல்வியடைந்தார்.
மற்றொரு தமிழக வீராரான பிரக்ஞானந்தா ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாமுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.