சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் கார்லஸ் அல்காரஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னரை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் அல்காரஸ் 2023ம் ஆண்டிற்குப் பிறகு டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சின்னர் 2-வது இடத்துக்குச் சரிந்துள்ள நிலையில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்தில் நீடிக்கிறார். நோவக் ஜோகோவிச் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.