இத்தாலியில் கனமழையால் ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.
இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில் ஸ்பெசினா மற்றும் மாஸா மாகாணத்தில் கனமழையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தொடர் கனமழையால் மாஸா ரயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. சுரங்கப்பாதையின் படிக்கட்டுகளை மழைநீர் மூழ்கடித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.