புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றிப் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பாக மீண்டும் நடந்த தகராறில் முருகேசனை, மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக மணிகண்டன் தரப்பை சேர்ந்த குமாரவேல் என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார்ப் பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்துக் காவல்நிலையத்திற்கு வந்த குமாரவேலின் மனைவி வேதவல்லி, உடலில் பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள், வேதவல்லியை தடுத்து நிறுத்தினர்.