நடிகை அணஸ்வரா ராஜன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.
டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.
எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். மலையாள நடிகை அணஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகை அணஸ்வரா ராஜன் பிறந்தநாளையொட்டி படக்குழு அணஸ்வராவுக்குக் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.